தேனி அரசு மருத்துவமனையின் அவல நிலை; மழை நீர் உள்ளே புகுந்ததால் நோயாளிகள் கடும் அவதி

By Velmurugan s  |  First Published Nov 6, 2023, 11:34 AM IST

தேனி அரசு மருத்துவமனையில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பதால் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.


தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வானிலை மையம் சார்பாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தேனி மாவட்டத்தில் தேனி, போடி, பெரியகுளம், கம்பம், ஆண்டிபட்டி என பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்களாக தொடர் கனமழை பெய்து வந்தது.

Tap to resize

Latest Videos

இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியும், தேனி மாவட்டத்தில் உள்ள அணைகள், நீர்நிலைகள் நிரம்பி வருகின்றது. இந்நிலையில்  இரவு முதல் பெய்த கனமழையால் தேனி கானாவிளக்கு பகுதியில் அமைந்திருக்கும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  மழைநீர் ஆறாக ஓடி வருகிறது.

அரேபிய கடலில் வலுவடையும் காற்றின் சுழற்சி.. அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் அதி கனமழை - எங்கெங்கே தெரியுமா?

முதியோர் உள்நோயாளிகள் பிரிவு, மத்திய ஆய்வக பிரிவு ஆகிய பகுதிகளில் மழை நீர் உள்ளே புகுந்ததால் உள் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சிகிச்சை பெற்று வரும் முதியோர்கள் தங்கி சிகிச்சை எடுக்கும் அறைகளில் உள்ள படுக்கை கீழ் ஆறு போல் மழை நீர் தேங்கி நிற்பதால் சிகிச்சையில் எடுத்து வரும் முதியவர்களும் அவர்களைப் பார்க்க வரும் உறவினர்களும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும் தேங்கி நிற்கும் மழை நீரால் முதியவர்களுக்கு பல்வேறு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்படக்கூடும் என்றும் தினசரியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை மேற்கொள்வதால் உடனடியாக மருத்துவமனையில் தேங்கி நிற்கும் நீரை அப்புறப்படுத்த வேண்டும் என நோயாளிகளின் கோரிக்கையாக இருக்கின்றது.

click me!