ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட பள்ளி மாணவன்; 36 மணி நேரம் போராடி உடலை மீட்ட தன்னார்வலர்கள்

By Velmurugan s  |  First Published Oct 25, 2023, 1:28 PM IST

உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில்  இழுத்துச் செல்லப்பட்ட மாணவன் மார்ட்டின் உடலை 36 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு தன்னார்வலர்கள் மற்றும் உறவினர்கள் மீட்டு உள்ளனர்.


தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே அமைந்துள்ள கோவிந்தன் பட்டியில் வசித்து வருபவர் ஆரோக்கியம் மற்றும் அன்னக்கொடி. இவர்களின் மகன் மார்ட்டின் என்பவர் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நண்பர்களுடன் விடுமுறை தினத்தை முன்னிட்டு உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் குளிக்க வந்துள்ளனர்.

முல்லைப் பெரியாற்றில் தவறி விழுந்ததில் மார்ட்டின் என்பவர் ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டார். இத தொடர்பாக தகவல் அறிந்து வந்த உத்தமபாளையம் தீயணைப்பு துறையினர் மற்றும் உத்தமபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

Latest Videos

undefined

கள்ளக்காதல் விவகாரத்தில் இளநீர் வியாபாரி படுகொலை; 2 மணீ நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்த போலீஸ்

நேற்று முழுவதும் தண்ணீரின் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் மாணவனை மீட்பதில் சிரமம் நீடித்தது. இதனைத் தொடர்ந்து தேனி, குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மாணவனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் அவர் கேரள மாநிலம் முல்லை பெரியாறு நீரினை குறைக்க கோரியதன் அடிப்படையில் தற்போது 800 கன அடியாக குறைத்துள்ளனர். 

இருந்தபோதிலும் தேனி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக முல்லைப் பெரியாற்றில் நீரின் அளவு குறையாமல் இருப்பதை தற்போதும் காணலாம். மேலும் இரண்டாவது நாளாக இன்று மாணவனை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் உத்தமபாளையம் காவல்துறையினர், தன்னார்வலர்கள் ஈடுபட்டு வந்தனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இரண்டாவது நாளான இன்று உத்தமபாளையம் கோட்டாட்சியர் பால்பாண்டியன் மற்றும் வட்டாட்சியர் சந்திரசேகர் சம்பவ இடத்திற்கு  வந்து நேரில் பார்வையிட்டதோடு மார்ட்டின் பெற்றோர்களுக்கும் ஆறுதல் கூறினார். இந்நிலையில் உடலை மீட்க ஆற்றில் இறங்கிய தன்னார்வலர்கள் மற்றும் உறவினர்கள் 36 மணி நேரத்திற்கு பிறகு மிகவும் சவாலான இடத்தில் தன்னுயிரைக் துச்சமான நினைத்து தன்னார்வலர்கள் மார்ட்டின் உடலை மீட்டனர். இதனைக் கண்ட இப்பகுதி வாழ் பொதுமக்கள் பெரிதும்  பாராட்டினர். 

புதுவையில் நிரம்பி வழியும் அரசு மருத்துவமனை; படுக்கை இல்லாததால் தரையில் படுக்க வைக்கப்படும் நோயாளிகள்

பின்பு உடலை கைப்பற்றிய போலீசார் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். பள்ளி மாணவர் முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்டது உத்தமபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

click me!