சமூக வலைதளங்களில் என்னைவிட என் மனைவி தான் டிரெண்டிங்கில் உள்ளார் - டிடிவி தினகரன் பேச்சு

By Velmurugan s  |  First Published Apr 16, 2024, 5:12 PM IST

சமூக வலைத்தளத்தில் தற்போது என்னை விட என் மனைவி தான் டிரெண்டிங்கில் உள்ளார் அதனால் எங்கள் கட்சிக்காரர்கள் எனது மனைவியை பிரச்சாரத்திற்கு அழைக்கிறார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


தேசிய ஜனநாயக கூட்டணி தேனி தொகுதி வேட்பாளரும், அமமுக பொதுச்செயலாளருமான டிடிவி தினகரன் இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், என் சொந்தங்களாக கருதுகிற தேனி மக்களுக்கு பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ராமநாதபுரம் பெரிய தொகுதி என்பதால் எனக்காக பிரசாரம் செய்ய வர முடியாத நிலையில் ஓபிஎஸ் இருக்கிறார். அவர் சார்பாக அவரின் குடும்பம் மற்றும் அவர் கட்சியின் நிர்வாகிகள் எனக்காக சிறப்பாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்றாம் உலகப் போரை தடுப்பதற்கு மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் - கோவையில் அண்ணாமலை பேச்சு

Tap to resize

Latest Videos

நடிகர் விஜய் சினிமாவில் சூப்பர் ஸ்டார். அவர் கட்சி ஆரம்பித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில்  மக்கள் தான் எஜமானர்கள். யார் வர வேண்டும் என்பது மக்கள் முடிவு செய்வார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். சிறந்த மக்களாட்சியை கொடுக்கும்.

சுங்கச்சாவடியை உடனே அகற்றுங்கள்; மதுரையில் 2000 கடைகள் அடைப்பு, வாகனங்கள் நிறுத்தம்

திமுக, அதிமுக கள்ள கூட்டணி வைத்துள்ளார்கள். தமிழகம் முழுவதும் அதிமுக மூன்றாம் இடத்தை தான் பிடிக்கும். என் மனைவிக்கு அரசியலுக்கு வர விருப்பமில்லை. நான் வெளியூர் சென்றதால் தான் எனக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அரசியலுக்கு வருவது அவரவர் தனிப்பட்ட விருப்பம். என்னை விட எனது மனைவிக்கு பொது மக்களிடம் வரவேற்பு இருப்பதால் எங்கள் கட்சிக்காரர்களே எனது மனைவியை பிரசாரத்திற்கு அழைக்கிறார்கள். சமூக வலைதளத்தில் என்னை விட எனது மனைவி தான் ட்ரெண்டிங்கில் உள்ளார் என்று கூறினார்.

click me!