தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலும் இனிமேல் தாமரை மலராது.. நாடகமாடும் அதிமுக.. கனிமொழி விளாசல்..!

By vinoth kumarFirst Published Apr 7, 2024, 3:31 PM IST
Highlights

சிறுபான்மையினரின் சகோதரர்கள் நாங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். ஆனால் பாஜகவுடன் சேர்ந்து சிஏஏ சட்டத்திற்கு வாக்களித்த போது சிறுபான்மையினர் சகோதரர்களை மறந்து விட்டீர்களா என்ற கேள்வி எழுப்பினார்.

லேடியா, மோடியா என்று சவால் விட்டவர் ஜெயலலிதா. ஆனால் இன்று அவர் படத்தை வைத்துக்கொண்டு பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து பொதுமக்களிடம் வாக்கு கேட்கிறார் டிடிவி. தினகரன் என்று கனிமொழி விமர்சித்துள்ளார். 

தேனி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி பிரச்சாரம் செய்தார். அப்போது கம்பம், சின்னமனூர் மற்றும் ஆண்டிப்பட்டி பகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி: அமித்ஷா இங்கு வராததற்கு காரணம் இங்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது என்பதால் தான் தமிழ்நாட்டில் தாமரை மலராது இனிமேல் இந்தியாவிலும் மலராது. சிறுபான்மையினரின் சகோதரர்கள் நாங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். ஆனால் பாஜகவுடன் சேர்ந்து சிஏஏ சட்டத்திற்கு வாக்களித்த போது சிறுபான்மையினர் சகோதரர்களை மறந்து விட்டீர்களா என்ற கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: அண்ணாமலை பிரசார வாகனத்தை மறைத்த பெண்: பல்லடத்தில் பரபரப்பு!

அதிமுகவும், பாஜகவும் தனித்தனியே என்று நாடகமாடி மக்களை ஏமாற்றுகிறார்கள். லேடியா, மோடியா என்று சவால் விட்டவர் ஜெயலலிதா அவர் படத்தை வைத்துக்கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்து பொதுமக்களிடம் டிடிவி. தினகரன் வாக்கு கேட்கிறார். 

பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு முன்பு டிடிவி. தினகரன் மீது பல்வேறு வழக்குகள் இருந்தது இன்று பாஜகவுடன் கூட்டணி வைத்த நிலையில் அவர் வழக்குகள் இன்றி சுத்தமானவராக ஆகிவிட்டார். இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கும் பெட்ரோல் 75 ரூபாய்க்கும் டீசல் 65 ரூபாய்க்கும் கொடுக்கப்படும் என மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும் பொது மக்களின் வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் மூலம் பிடிக்கப்படும் பணம் நிறுத்தப்படும் என்றும் விவசாய கடன் மற்றும் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என பிரச்சாரத்தில் பேசினார். 

இதையும் படிங்க:  திமுகவை தோற்கடிச்சீங்கன்னா.. அடுத்த மாதமே அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம்.. ஐடியா கொடுக்கும் ராமதாஸ்!

click me!