திமுக அரசு தொடர்ந்து பெண்களை வஞ்சித்து வருகிறது; காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு

By Velmurugan sFirst Published Apr 5, 2024, 11:54 AM IST
Highlights

மின்கட்டணம், சொத்துவரி, பால்விலை என அனைத்தையும் உயர்த்தி திமுக அரசு பெண்களை வஞ்சிப்பதாக காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டி உள்ளார்.

தேனி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து சமீபத்தில் அதிமுகவில் இணைந்த காயத்ரி ரகுராம் பிரசாரம் மேற்கொண்டார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் வாகனத்தில் நின்றபடி பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், திமுகவும், பாஜகவும் வாரிசு அரசியல் செய்கின்றன. ஜெயலலிதாவுக்கு பின்னால் நிறைய சதி நடைபெற்றது. அதற்கு காரணம் பாஜக தான். ஆனால் அவர்களோடு இன்று டிடிவி தினகரன் கூட்டணி வைத்துள்ளார்.

ஆயிரம் ரூபாய் உரிமை தொகை இங்கு பாதி பேருக்கு கிடைப்பதில்லை. திமுக ஆட்சியில் மின் கட்டணம், சொத்து வரி, விலைவாசி உயர்வு அனைத்தையும் ஏற்றிவிட்டு அவர்கள் கொடுக்கும் ஆயிரம் ரூபாயை வைத்து என்ன செய்வது? பெண்களை வஞ்சிக்கின்ற அரசியல் செய்கிறது திமுக. தற்பேது டாஸ்மாக்கை தாண்டி நடைபெறும் போதைப் பொருள் விற்பனையால் பாலியல் வன்கொடுமை, பாலியல் சீண்டல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை பெண்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

போலீசாக இருந்து திருடர்களை பிடித்ததை விட பாஜக தலைவராகி அதிக திருடர்களை அண்ணாமலை பிடித்துள்ளார்-G.ராமகிருஷ்ணன்

ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது மக்களுக்கு தேவையான ஒவ்வொரு திட்டத்தையும் ஆராய்ந்து செயல்படுத்தினார். அதில் ஒன்று தான் 7.5% உள் இட ஒதுக்கீடு. இன்று அத்திட்டத்தின் மூலம் நமது அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மருத்துவம் படிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் பத்திரம் என்ற பெயரில் ஊழலையே சட்டபூர்வமாக செய்த கட்சி தான் பாஜக - கனிமொழி விமர்சனம்

திமுக ஆட்சியில் டாஸ்மாக்கை தாண்டி செல்கிறது போதை பொருள் கலாசாரம். இதன் மூலம் பெண்கள் மிகவும் பாதிப்படைகின்றனர். தமிழ்நாட்டின் உரிமைக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் உழைத்த அதிமுக வெற்றி பெற தேனி வேட்பாளர் நாராயணசாமியை வெற்றி பெற வையுங்கள் என பிரச்சாரத்தில் பேசினார்.

click me!