பெயர் பலகை இல்லாத பேருந்தை ஓட்டுவது போல் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமலே இருக்கின்றார் என தேனியில் நடைபெற்ற திமுக பிரச்சாரத்தில் திண்டுக்கல் ஐ லியோனி விமர்சனம் செய்தார்.
தேனி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை ஆதரித்து திண்டுக்கல் ஐ லியோனி பிரசாரம் செய்தார். தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் பிரசாரத்தின் போது பேசிய அவர், தமிழகத்திற்கு பிரதமர் வரும் போது எல்லாம் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.
தமிழ்நாடு மக்களுக்காக ஒரு முறையாவது போராட்டம் செய்து சிறைக்குச் சென்று இருப்பாரா அண்ணாமலை. ஆனால் திமுக தலைவர்கள் மக்களுக்காக போராடி வருடக் கணக்கில் சிறைக்குச் சென்றவர்கள். பெயர் பலகை இல்லாத பேருந்தை ஓட்டுவது போல் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமலே இருக்கின்றனர்.
எங்கள் வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் இலைக் கட்சியில் (அதிமுக) இருந்தபோது இலையை ஆடு மேய்ந்து விட்டு போயிட்டது, குக்கர் அருகே நின்ற போது குக்கரில் சோறு இல்லாமல் விசில் அடித்தது. இன்று சூரியனை நோக்கி திரும்பி வந்துள்ளார்.
ED, IT எல்லாம் எங்களுக்கு ஜூஜூபி; ஜெயில கட்டுனதே எங்களுக்காக தான் தம்பி - செல்லூர் ராஜூ
ஒற்றை விரலால் ஓங்கி அடிப்பேன் எனக் கூறும் எடப்பாடி பழனிச்சாமியை ஓரங்கட்ட வேண்டும். மக்களை மதத்தாலும், ஜாதியாலும் பிரிக்கின்ற மோடியின் ஆட்சிக்கு முடிவு கட்டி மதசார்பற்ற தலைவரை பிரதமராக்க திமுக வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும். கொள்கை இல்லாதவர்கள் என்ன நிலைமைக்கு ஆளாவார்கள் என்பது ஓ.பன்னீர்செல்வத்தை தவிர வேறு யாரும் உதாரணம் இல்லை என்றார்.