இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். தமிழகத்தை முதலில் ஸ்டாலினிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். தமிழகத்தை கோபாலபுரம் குடும்பத்திடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.
தேனியில் டிடிவி. தினகரனை தோற்கடிக்க வேண்டும் என அதிமுக, திமுக வேட்பாளர்கள் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள் என அண்ணாமலை கூறியுள்ளார்.
தேனி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் டிடிவி. தினகரனுக்கு ஆதரித்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்: அண்ணாமலையும், டிடிவி தினகரனும் ஏன் ஒன்றிணைந்துள்ளோம் என்றால், தமிழகத்தின் அரசியல் மாறிக்கொண்டிருக்கிறது. 2026ம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கான அடித்தளம் தான் தற்போது நடக்கும் மக்களவை தேர்தல். தமிழகத்தில் மாற்ற வரவேண்டும் என்பதற்காக டிடிவி.தினகரனே களமிறங்கி உள்ளார்.
undefined
திமுக குடும்பத்திடம் இருந்து தமிழகத்தை காக்க வேண்டும். திமுகவினர் தரும் பணம் கஞ்சா விற்ற பணம். அதை வேண்டாம் என்று சொல்லுங்கள். தமிழகத்தில் ஊழல், குடும்ப ஆட்சி, உரிமைகளை விட்டுக் கொடுக்கும் பிரஷர் இருக்கிறது. அதனை சரி செய்ய பிரஷர் குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் என்டிஏ கூட்டணி அமைவதற்கு முக்கிய காரணம் டிடிவி.தினகரன். இது சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல. 2026ல் அரசியல் மாற்றம் வரும் வரை தொடரும்.
இதையும் படிங்க: பாஜக தேர்தல் பணிகளில் இருந்து பாமக விலகுகிறதா? கோவை மாவட்ட செயலாளர் கொடுத்த பரபரப்பு விளக்கம்..!
இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். தமிழகத்தை முதலில் ஸ்டாலினிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். தமிழகத்தை கோபாலபுரம் குடும்பத்திடம் இருந்து காப்பாற்ற வேண்டும். அதிமுக தொண்டர்கள் வாக்கும் டிடிவி.தினகரனுக்கு தான். அதிமுக தொண்டர்கள் அமமுகவுடன் இணைய போகிறார்கள். அவர்களை வழிநடத்தக் கூடிய உண்மையான தலைவன் யார் என்பது அதிமுக தொண்டர்களுக்கு தெள்ளத் தெளிவாக தெரியும்.
குக்கர் சரித்திரம் படைக்கும் டிடிவி.தினகரன் நிச்சயமாக நாடாளுமன்றம் செல்வார். மென்மையான தலைவர் டிடிவி.தினகரன். இப்போது தான் புரிகிறது எடப்பாடி பழனிசாமி ஏன் இவரைப் பார்த்து பயப்படுகிறார் என்று. தேனியில் டிடிவி. தினகரனை தோற்கடிக்க வேண்டும் என இரண்டு வேட்பாளர்கள் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள். இபிஎஸ் தலைமையிலான அதிமுகவும், திமுகவும் வேறு வேறு அல்ல, ஒன்றுதான். இருகட்சிகளும் சேர்ந்து டிடிவி.தினகரனை தோற்கடிக்க முயல்கிறார்கள்.
இதையும் படிங்க: துண்டுச்சீட்டு முதல்வர்! வித்தவுட் டிக்கெட்டில் வந்த குடும்பம்! ஊழல் காரணமாக ஆட்சியை இழந்த கட்சி! TTV விளாசல்!
ஏப்ரல் 19ம் தேதி தேனி தொகுதியில் அதிமுக தொண்டர்களும் தினகரனுக்கே ஓட்டளிப்பார்கள். டிடிவி. தினகரனுக்கு முழுமையான ஆதரவை கொடுக்க வேண்டும். ஜூன் 4ம் தேதிக்குப் பின்னர் இபிஎஸ் தலைமையில் அதிமுக இருக்காது. அதிமுக டிடிவி. தினகரன் வசமாகும். டிடிவி கையில் முதலில் அதிமுக சென்று இருந்தால் ஸ்டாலின் தேர்தலில் வென்று இருக்க மாட்டார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.