தேனியில் பரபரப்பு; விசாரணைக்கு சென்ற காவலரிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டல்

By Velmurugan s  |  First Published Jul 3, 2023, 9:29 AM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் விசாரணைக்குச் சென்ற காவல் அதிகாரியை வழிமறித்த இருவர் அரிவாலை காட்டி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் தென்கரை பட்டாளம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் மாயழகு என்பவரது மகன் தினேஷ். பட்டாளம்மன் கோவில் தெரு பகுதியில்  இரு நபர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக காவல்துரை துறை கட்டுப்பாட்டு அறையான 100க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி தென்கரை காவல்துறையினர் நேரில் விசாரிக்கச் சென்ற காவலரை எதுக்கு தெருவுக்குள் நீ வந்த? உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது? நீ தெருவுக்குள் வர்ரதா இருந்தா பஞ்சாயத்தார்கள் கிட்ட அனுமதி வாங்கிட்டு தான் வரனும் என்று வாய்க்கு வந்தவாறு பேசிக் கொண்டிருந்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

பிரச்சினைக்கு காரணமான செல்வம் என்பவரது மகன் காமராசு என்பவர் தனது திருட்டு இரு சக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வந்து சீருடையில் இருந்த காவலரை பார்த்து "ஒரே வெட்டுல உன் தல துண்டா போயிடும்" பாக்குறியா... என்று கூறியவாறு அரிவாளை எடுத்து வந்து காவலரை தாக்க முற்பட்டார். அருகில் இருந்தவர்கள் தடுக்கவே காவலர் உயிர் தப்பியதாகக் கூறப்படுகின்றது. மேலும் பெரியகுளம் பட்டாளம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த கோவில் பஞ்சாயத்தார்களான இரும்புத்திரை என்ற காமு மற்றும் செல்வராஜ் ஆகியோர் காவல் துறையினர் ஊருக்குள் வர கட்டுப்பாடு விதித்துள்ளதாக இவர்கள் பேச்சிலிருந்து தெரிய வருகின்றது. 

இதன் காரணமாக பெரியகுளம் பட்டாளம்மன் கோவில் பகுதிகளில் நடந்து வரும் பல்வேறு குற்ற சம்பவங்கள் இவர்களினால் மூடி மறைக்கப்பட்டு வருவதாக தெரிகின்றது. பட்டாளம்மன் கோவில் தெரு பகுதிகளில் சமீப காலமாக கஞ்சா, மது, வெளிமாநில மது மற்றும் பல்வேறு பகுதிகளில் குற்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடிய நபர்களின் நடமாட்டம் உள்ளிட்டவை அதிகரித்து வருகின்றது. பெரியகுளம் பகுதியில் அரிவாலை எடுத்து வந்து காவலரை வெட்ட முற்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூரில் கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்ட 16 வயது சிறுமி பலி - மருந்தகத்திற்கு சீல் 
 

click me!