தங்கள் பகுதியில் குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் முறையாக இல்லை என்று கூறி கம்பம் தொகுதிக்குட்பட்ட கிராம மக்கள் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணனை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூர் என்ற கிராமத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடைகள் குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார். அந்த விழாவிற்கு வருகை தந்த மலை மாடுகள் வளர்ப்போர் சங்கத்தினர் விழாவில் கலந்து கொண்ட கம்பம் சட்டமன்ற உறுப்பினரை வழிமறித்து மலைமாடுகளை வனப்பகுதியில் மேய்ப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என அவரை முற்றுகையிட்டனர்.
undefined
இதனைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களும் ஒன்றிணைந்து விழா நடைபெற்ற தனியார் மண்டபத்தின் கதவை பூட்டிக்கொண்டு கம்பம் சட்டமன்ற உறுப்பினரை சிறை வைத்து அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அளவுக்கு அதிகமாக கடன் வாங்கிய மகன்; வாழ்க்கையை முடித்துக் கொண்ட பெற்றோர்
இந்த வாக்குவாதத்தில் தங்கள் ஊருக்கு அடிப்படை வசதியான தண்ணீர் வசதி, சாலை வசதி, சாக்கடை வசதி போன்றவைகள் எதுவும் செய்யப்படவில்லை என்றும், மலை மாடுகளை எந்த ஒரு இடையூறும் இல்லாமல் வனப்பகுதியில் மேய்ப்பதற்கு தாங்கள் அனுமதி உடனே வழங்க வேண்டும் எனக் கூறியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் சிக்னல் கொடுத்தும் நிற்காமல் சென்ற ரயில்; பயணிகள் ஆவேசம்
இதனால் அதிர்ச்சியடைந்த கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களுடனும், மலை மாடுகள் வலப்போர் சங்கத்தினர் உடனும் பேச்சுவார்த்தை செய்து துறை சார்ந்த அமைச்சர்களுடன் பேசி விரைவில் உங்களுக்கு தீர்வு கிடைக்கும் என உறுதி அளித்த பின் அவரை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் வெகு நேரமாக பரபரப்பாகவே காணப்பட்டது.