காவிரி விவகாரத்தில் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது எடியூரப்பாவும், பொம்மையும் தான் - அழகிரி குற்றச்சாட்டு

By Velmurugan s  |  First Published Sep 1, 2023, 9:34 AM IST

காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டபோது அதனை முதலில் எதிர்த்த எடியூரப்பா, பசவராஜ் பொம்மைக்கு எதிராக தமிழக பாஜக குரல் கொடுக்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி குற்றம் சாட்டி உள்ளார்.


தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழக காங்கிரஸ் தமிழக முதல்வருடன் ஒன்றிச் செல்கிறது. சட்டத்திற்கு உட்பட்டு காங்கிரஸ் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. 

ஆனால் தமிழகத்திற்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் தர வேண்டும் என உத்தரவிட்டதும் கர்நாடகாவில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது முன்னாள் முதல்வர்களான பசவராஜ் பொம்மை, எடியூரப்பா, போன்றவர்கள் தான் முதலில் அங்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து குமாரசாமிஎதிர்ப்பு தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

undefined

கிறிஸ்தவ கல்லூரிக்குள் சென்று விநாயகர் சதுர்த்திக்கு டொனேசன் கேட்டு வாக்குவாதம்

தமிழகத்திற்கு தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்த எடியூரப்பா, பொம்மை ஆகியோரை எதிர்த்து தமிழக பாஜகவினர் இதுவரை குரல் கொடுக்கவில்லை. இது கண்டிக்கத்தக்கது. காவிரி நதி நீர் பிரச்சினையில் இதுவரை வானதி சீனிவாசன், அண்ணாமலை, முருகன் என எவரும் வாய் திறக்கவில்லை. 

சுங்கச்சாவடியில் பெரும் கொள்ளை நடைபெற்று உள்ளது. குறிப்பாக பரனூர் சுங்கச்சாவடியில் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிவை சந்தித்துள்ள நிலையில் 9 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சமையல் எரிவாயு விலையை உயர்த்தி வந்த பாஜக அரசு தற்போது 200 ரூபாய் குறைத்துள்ளது.

சீமானை கைது செய்ய திட்டமா.? விஜயலட்சுமியிடம் விடிய விடிய விசாரணை- போலீசார் நடத்திய திடீர் டிராமாவால் பரபரப்பு

காங்கிரஸ் கட்சி ஆட்சியை விட்டு வெளியே வரும்போது 400 ரூபாய்க்கு ஒரு சிலிண்டர் சமையல் எரிவாயு வழங்கப்பட்டது. முறைப்படி பார்த்தால் தற்போது சமையல் சிலிண்டர் 200 ரூபாய்க்கு தர வேண்டும் என்றும் கேஎஸ் அழகிரி தெரிவித்தார்.

click me!