காரைக்குடியில் தொண்டைக்குள் மீன் சிக்கி மூச்சுவிட முடியாமல் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடியில் தொண்டைக்குள் மீன் சிக்கி மூச்சுவிட முடியாமல் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி கண்மாயில் மக்கள் ஏராளமானோர் ஒன்று சேர்ந்து மீன் பிடித்தனர். அப்போது இளையராஜா (30) என்ற வாலிபரும் கண்மாயில் இறங்கி மீன் பிடித்துக்கொண்டிருந்தார். அதிக மீன்கள் பிடிக்கும் ஆசையில் ஒரு மீனை லாவகமாக பிடித்து தனது வாயில் கவ்விக் கொண்டு மற்ற மீன்களைப் பிடிக்க முயற்சித்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக வாயில் கவ்வியிருந்த மீன் இளையராஜாவின் சிக்கி கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளையராஜா கையால் மீனை வாய்க்குள் இருந்து எடுக்க முயன்றார். ஆனால், அதற்குள் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் மயக்க நிலையில் சென்றுவிட்டார். உடனே இளையராஜாவை மீட்டு அங்கிருந்தவர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர் வழியிலேயே இளையராஜா பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொண்டைக்குள் மீன் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.