இதுகுறித்து அரசோ, மாவட்ட நிர்வாகமோ, வனத்துறையினரோ எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிற ஆதங்கத்தில் இருக்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, மேலவெள்ளூர், அம்பலத்தாடி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக நடந்து வருகிறது. தற்போது நெல் அறுவடைக்கு தயாராகி வருகிறது. நெல் அதிக அளவில் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதிகளில் உள்ள சீமைக்கருவேலை பகுதியில் இருந்து காட்டுப்பன்றிகள் வெளியேறி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து செய்து வருகிறது.
இந்நிலையில் விவசாயிகள் என்ன செய்வது என திகைத்து வருகின்றனர். கட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுந்து நெற்பயிர்களை அழித்து சேதப்படுத்தி வருகின்றன. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களையும் பயிர்களையும் சேதப்படுத்தி வருவதால் மகசூல் ஈட்ட முடியவில்லை. இது அடுத்த கட்ட விவசாயம் செய்வதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது. எனவே காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் உட்புகாமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், காட்டுப்பன்றிகளுக்கு பயந்து விவசாயிகள் வயல்காட்டுகளுக்கு செல்ல அச்சம்காட்டி வருகின்றனர். இத்தனைக்கும் இந்தப்பகுதிகளுக்குள் வனங்கள் ஏதும் இல்லை. இருப்பனும் ஆயிரக்கணக்கான காட்டுபன்றிகள் பல்கி பெருகி விட்டன. வரும் காலத்தில் காடுப்பான்றிகளின் அட்டகாசம் இன்னும் அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால், இதுகுறித்து அரசோ, மாவட்ட நிர்வாகமோ, வனத்துறையினரோ எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிற ஆதங்கத்தில் இருக்கிறார்கள் இப்பகுதி மக்கள்.