சிவகங்கையில் திருமணமான 3 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கையில் திருமணமான 3 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் வசித்து வரும் கார்த்தி என்பவருக்கும், கஸ்தூரி என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கஸ்தூரியிடம் வரதட்சணை கேட்டு கார்த்தி மற்றும் அவரது பெற்றோர்கள் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்த கஸ்தூரி திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது பெற்றோருக்கு கார்த்தி வீட்டார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் போலீசாருக்கு இது தொடர்பாக தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கஸ்தூரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் கஸ்தூரியின் உறவினர்கள், கார்த்தி மற்றும் அவரது பெற்றோரை சரமாரி தாக்கியுள்ளனர். பிறகு போலீசார் சமாதானப்படுத்தினர். இதனையடுத்து கஸ்தூரியின் தாயார் அளித்த புகாரின் பேரில் கார்த்தி மற்றும் அவரது பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.