லிப்ட் கொடுத்து பைக்கில் ஏற்றிச் சென்றவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிப்பு... கடன் கொடுத்தவர் ஆத்திரம்..!

By vinoth kumar  |  First Published Apr 9, 2019, 5:03 PM IST

காரைக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏறிய நபர், வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



காரைக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏறிய நபர், வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அவுடபொய்கை எனும் ஊரைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவர் பாதரக்குடி ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருந்தார். இவர் பதவி வகித்த காலத்தில், மொட்டுபாளையத்தைச் சேர்ந்த குஞ்சு முகமது என்பவரிடம், கண்மாய் குத்தகை தொடர்பாக 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வாங்கியதாகக் கூறப்படுகிறது. 5 ஆண்டுகள் ஆகியும் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில், இன்று முருகானந்தம், அவுடபொய்கை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் நின்ற குஞ்சு முகமது லிப்ட் கேட்கவே முருகானந்தம் தமது இருசக்கர வாகனத்தில் ஏற்றியுள்ளார். சிறிது தூரம் கடந்த பின்னர் தன்னை குஞ்சு முகமது என அறிமுகப்படுத்திய அவர் பணத்தை எப்போது திருப்பித் தரப்போகிறார் என முருகானந்தத்திடம் கேட்டுள்ளார். இதனையடுத்து திடீரென அவர் மறைத்திருந்த பெட்ரோலை முருகானந்தம் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். பின்னர் இருக்கர வாகனத்தில் இருந்து முகமது கீழே குதித்துவிட்டார். 

இதனையடுத்து தீ உடல் முழுவதும் பரவியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகானந்தம் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக குஞ்சு முகமதுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!