சிவகங்கை அருகே உள்ள கோமாளி பட்டி ஊராட்சி பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பாரதி பணியாற்றி வந்தவர் . இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் 2வது பிரசவத்திற்காக சிவகங்கை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று இரவு அவருக்கு பிரசவலி ஏற்பட்டதையடுத்து அழகான பெண் குழந்தை பிறந்தது.
சிவகங்கையில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் போது ஆசிரியை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, சிகிச்சையால் உயிரிழந்ததாக உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
சிவகங்கை அருகே உள்ள கோமாளி பட்டி ஊராட்சி பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பாரதி பணியாற்றி வந்தவர் . இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் 2வது பிரசவத்திற்காக சிவகங்கை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று இரவு அவருக்கு பிரசவலி ஏற்பட்டதையடுத்து அழகான பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டு ஆசிரியை பாரதி பரிதாபமாக உயிரிழந்தார். பாரதி உயிரிழந்த செய்தியை அறிந்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, அவரது மரணத்திற்கு மருத்துவமனையில் அளித்த தவறான சிகிச்சையே காரணம் எனக் கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆசிரியரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பிரசவத்தின் போது பெண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் ஆசிரியர் பாரதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.