குழந்தை இல்லாத ஏக்கம்.. காதல் திருமணம் செய்த தம்பதி எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் மூழ்கிய கிராமம்..!

By vinoth kumar  |  First Published Aug 25, 2021, 4:07 PM IST

செல்வமுத்துக்குமார் அவரது உறவுக்காரப் பெண்ணான நித்யாவை (26) கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன், இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.


காரைக்குடியில் காதல் கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஜெய்ஹிந்த் நகரைச் சோ்ந்த லாரி உரிமையாளர் சீனிவாசன். இவரது இளைய மகன் செல்வமுத்துக்குமாா் (30). இவர் அதேபகுதியில்  மொபைல் போன் விற்பனைக் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், செல்வமுத்துக்குமார் அவரது உறவுக்காரப் பெண்ணான நித்யாவை (26) கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன், இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில், திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லையே என்ற ஏக்கம் இருவருக்கும் இருந்து  வந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த செல்வ முத்துக்குமாா் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்த மனைவி நித்யா நேற்று இரவு படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  நித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமணமான இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் காதல் கைகூடிய தம்பதியினர் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே  பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!