முதலமைச்சர்களை கைது செய்து விட்டு தேர்தலை நடத்தலாம் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. அதில் மோடி பேராசிரியர், நாங்கள் கத்துக்குட்டி தான் என்று சிவகங்கையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் அரண்மனை வாசல் அருகே இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், கார்த்தி சிதம்பரத்தின் தந்தையுமான ப.சிதம்பரம் கலந்துகொண்டு பிரசாரம் செய்தார்.
பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத பாஜக கோவை தொகுதியில் எப்படி வெற்றி பெறும்? வேலுமணி கேள்வி
அப்போது அவர் பேசுகையில், முதல்வர்களை கைது செய்து விட்டு தேர்தலை நடத்தலாம் என்று எங்களுக்குத் தோன்றவில்லை. அதில் மோடி பேராசிரியர். நாங்கள் கத்துக்குட்டி தான். மேலும் நாங்கள் ஆட்சி செய்த போது முதல்வர்களை கைது செய்து சிறையில் அடைத்து தேர்தல் நடத்தி இருந்தால், மோடியும் சிறையில் இருந்திருப்பார்.
ஆனால் காங்கிரஸ் கட்சி அதை செய்யவில்லை. எங்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உண்டு. நாங்கள் சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்தவில்லை. ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து விலைவாசி உயர்வு, வேலையின்மையை அதிகரித்த பாஜக அரசு நீடிக்க கூடாது. அதற்கு காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டார்.