திமுகவும், காங்கிரசும் கூட்டு சதி செய்து தமிழகத்திற்கு துரோகம் இழைத்தார்கள் - எச்.ராஜா குற்றச்சாட்டு

By Velmurugan sFirst Published Apr 3, 2024, 7:20 PM IST
Highlights

தமிழருக்கு எதிராக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததில்திமுக காங்கிரஸ் கூட்டு சதி செய்துள்ளது தற்போது வெளிவந்துள்ளது காரைக்குடியில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டி.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாஜக தேர்தல் அலுவலகத்தில் பாஜக சார்பில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தேவநாதன் உடன் முன்னாள் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 1974ம் ஆண்டு ஒப்பந்தத்தின் மூலமாக மத்தியில் இருந்த காங்கிரஸ் கட்சி கச்சத்தீவை  இலங்கைக்கு தாரை வார்த்தது. காங்கிரஸ் மட்டும் அல்ல, திராவிட முன்னேற்றக் கழகம், தற்போதைய முதல்வர் தனது நாடகத்தின் மூலம் ஒப்புதல் அளித்து தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டுள்ளது. 

இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்ட போது 2009ம் ஆண்டு மூன்று மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தவர் தான் கருணாநிதி. அப்போது என்ன சொன்னார்? சிதம்பரம் சொல்லிவிட்டார் போர் நிறுத்தம் என்று கூறி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். 1974ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் தேதி செயின் ஜார்ஜ் கோட்டையில் மத்திய அரசின் வெளி உறவுச் செயலாளர், தலைமைச் செயலாளர் சபாநாயகம், உள்துறை செயலாளர் ஆம்பூரோஸ் இந்த நான்கு பேரும் அங்கு கூடி கருணாநிதியின் ஒப்புதலுடன் தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பது. 

தனி்யார் தொலைக்காட்சி விவாதத்தில் வெடித்த மோதல்; குடும்ப தலைவரை வெட்டி கொன்ற மனைவி, மகன்

76ல் ஒப்பந்தத்திற்குப் பிறகு கச்சத்தீவு இலங்கையின் பகுதி என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அப்படி என்றால் திமுக எவ்வளவு பெரிய துரோகத்தை செய்துள்ளது. குடி என்றால் என்னவென்று தெரியாத தமிழர்களை குடிக்க வைத்து குடியை கெடுத்தவர் கருணாநிதி. முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காரணம் காங்கிரசும், திமுகவும் தான். ஆனால் தமிழர்களை 50 ஆண்டுகளுக்கு முன்பு முதுகில் குத்திய சம்பவத்தை இன்று ஏன் ஞாபகப்படுத்துகிறீர்கள் என்று கேட்கிறார்கள். 

தனி்யார் தொலைக்காட்சி விவாதத்தில் வெடித்த மோதல்; குடும்ப தலைவரை வெட்டி கொன்ற மனைவி, மகன்

நீங்கள் மீண்டும் துரோகம் செய்யக்கூடாது என்பதற்காக தான். மத்திய அரசிடம் அடிக்கடி பணம் கேட்கிறார். சென்னையில்  மழை நீர் வடிகால் அமைப்பு திட்டத்திற்கு 4 ஆயிரம் கோடி பெற்று விட்டு செலவு செய்தோம் என்று கூறினீர்கள். மந்திரி 40 சதவீத தான் செலவு செய்து உள்ளோம் என்று சொல்கிறார். கணக்கு கொடுக்காமல் பணம் தர முடியுமா? முதல் தரம் பணம் தரப்பட்டுள்ளது. கணக்கு கொடுக்காமல் பணம் தர முடியாது. ஒரு எம்பிக்கு 8 கப்பல்  உள்ளது. ஆனால் அவரிடம் கார் இல்லையா? அண்ணாமலை தகவல் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆவணங்கள் தற்போது இவர்களுக்கு வயிறு எரிகிறது. 

ப.சிதம்பரமும், கார்த்திக் சிதம்பரமும் திகார் சிறையில் இருந்தவர்கள். 10 ஆண்டுகளாக பேசாத விஷயத்தை தற்போது பேசுவதற்கு என்ன காரணம் என்று செய்தியாளர் கேள்விக்கு, கச்சத்தீவு ஒப்பந்தம் சர்வதேச ஒப்பந்தம். தாரை வார்த்து கொடுத்தவரை கேள்வி கேட்டுவிட்டு வாருங்கள். அதன் பின்பு ஏன் மீட்கவில்லை என்று கேட்கலாம். நேற்று வெளியுறவுத்துறை அமைச்சர் தெளிவாக சொல்லியுள்ளார். அதற்குள்ள நடவடிக்கையை நாங்கள் எடுப்போம் என்றார்.

click me!