இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் நோக்கத்தோடே குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நாடளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளதால் பொன்முடி எம்எல்ஏ ஆவதற்கும், அமைச்சர் ஆவதற்கும் சட்டப்படி தகுதி உண்டு. மேலும் போதைப் பொருளை கட்டுப்படுத்த அதன் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதுடன், போதையால் அடிமையானவர்களுக்கு சீர்திருத்த மையத்தையும் அமைக்க வேண்டும்.
பாஜக ஆட்சி செய்யும் குஜராத்தில் தான் அதிகமான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. போதைப் பொருள் வர்த்தகத்தை திமுகவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டதால் தமிழ்நாட்டிற்கான பிரச்சனையாகவோ, ஒரு அரசியல் கட்சி சார்ந்த பிரச்சனையாகவோ பார்க்க கூடாது. இந்தியாவிற்கான பிரச்சினையாக பார்க்க வேண்டும். ஒரு தனி நபர் செய்யும் வர்த்தகத்திற்கு, அவர் சார்ந்த கட்சி பொறுப்பேற்க முடியாது.
தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - ஜெயக்குமார் திட்டவட்டம்
குடியுரிமை வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது. இந்தியாவில் இஸ்லாமிய மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் சிஏஏ சட்டத்தை பாஜகவினர் கொண்டு வந்துள்ளனர். இலங்கை அகதிகளை குடிமக்களாக சேர்த்துக் கொள்ளாததற்கு பாஜக விளக்கம் தர வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் CAA சட்டத்தை கண்டிப்பாக திரும்பப் பெறுவோம். அகதிகளுக்கு தஞ்சம் கொடுப்பது நல்ல எண்ணம். அதனை மத ரீதியாக பிரித்து பார்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
15 ஆண்டுகளாக உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை; தமிழக வெற்றி கழகத்தில் வெடித்த சர்ச்சை
தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. 40 இடங்களிலும் வெற்றி பெறும். சமத்துவ மக்கள் கட்சி MP, MLA, கவுன்சிலர் இல்லாத அது ஒரு லெட்டர் பேடு கட்சி. பாஜகவுடன் இணைந்தது ஆச்சரியம் இல்லை. தமிழகத்திற்கு வந்த மோடி அறிவித்த திட்டங்கள் இதுவரை ஏதும் துவங்க கூட இல்லை. பாஜக அரசின் குழப்பத்திற்கு காரணம் தவறான ஜிஎஸ்டி கொள்கை. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் தனிநபர் வருமானம் குறைகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்கிறது. சிறு தொழில் நடத்துபவர்களின் நிலை மோசமாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி அழைத்தால் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொள்வேன். எனது தாய் மாமன் நடிகர் கமலஹாசன் எனக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டால் அது எனது வெற்றிக்கு வலுசேர்க்கும் என தெரிவித்துள்ளார்.