ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளாத அமைச்சர் ராஜ கண்ணப்பன்.. ஏன்.?

By Raghupati R  |  First Published Jan 29, 2024, 12:28 PM IST

சிவகங்கை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர்  ராஜ கண்ணப்பன் பங்கேற்கவில்லை. விழா அழைப்பிதழில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பெயர் இடம் பெற்ற நிலையில் அவர் பங்கேற்கவில்லை.


சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர் ராஜ கண்ணப்பன் புறக்கணித்துள்ளார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 34வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்று 40,414 பட்டதாரிகளில் 348 பேருக்கு பட்டங்களை வழங்கினார். 

இந்த பட்டமளிப்பு விழா அழைப்பிதழிலில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பங்கேற்பதாக அச்சடிக்கப்பட்டு அனைவருக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. அமைச்சர் ராஜகண்ணப்பன் வருவார் என்று அதற்கான பல்வேறு ஏற்பாடுகள் பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்டிருந்தது.

Tap to resize

Latest Videos

undefined

வெறும் ரூ.55 ஆயிரத்தில் ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. லைசென்ஸ் தேவையில்லை.. உடனே முந்துங்க..

இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்ற காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் புறக்கணித்துள்ளார். அண்ணா நினைவு நாளில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

அப்போது ஒத்திவைக்க அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அதனை ஆளுநர் மாளிகை ஏற்க மறுத்தது. ஆளுநர் மாளிகை ஏற்க மறுத்த நிலையில் இன்றைய விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.

குறைந்த விலையில் அயோத்தி செல்ல அருமையான வாய்ப்பு.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா..

click me!