அடங்காபிடாரியாக செயல்படும் அமலாக்கத்துறையை நீதிமன்றம் தான் கட்டுப்படுத்த வேண்டும் - கார்த்தி சிதம்பரம்

By Velmurugan sFirst Published Mar 22, 2024, 6:56 PM IST
Highlights

அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது கண்டிக்கத்தக்கது நீதிமன்றம் மட்டுமே அடங்காப்பிடாரியான அமலாக்கத் துறையை கட்டுப்படுத்த வேண்டும் என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் எம்.பி. கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. நீதிமன்றம் மட்டுமே அடங்காப்பிடாரியான அமலாக்கத் துறையை கட்டுப்படுத்த வேண்டும். எல்லாமே சட்டப்படி தான் நடக்கிறது என்றால் இயேசு பிரானை சிலுவையில் சாத்தியதும் சட்டப்படிதான் நடந்தது. 

தேர்தலுக்கு பின் சுவையான ஆட்டு பிரியாணி காத்திருக்கிறது; அண்ணாமலையை மறைமுகமாக பங்கம் செய்த அமைச்சர்

சட்டப்படி எல்லாம் தர்மம் ஆகாது. எதிர்க்கட்சிகளை முடக்குவதற்காகவே நடக்கிறது. பாஜகவுடன் கூட்டணி வைப்பவர்களை எதுவும் செய்வதில்லை. பழைய வழக்குகள் இருந்தால் மூடி மறைத்து விடுகிறார்கள். தமிழ்நாட்டில் கூட அமமுக, பாமக மீது குற்றச்சாட்டுகளை வைத்தார்கள். இப்போது அதைப்பற்றி எல்லாம் பேசுவதில்லை.

சீரும், சிறப்புமாக நடைபெற்ற கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய திருக்கல்யாண வைபவம்

2ஜி வழக்கை தேர்தலுக்காக தூசி தட்டி உள்ளார்கள். கீழ் கோர்ட்டில் அவர்கள் எப்படி வெற்றி பெற்றார்களோ அதே மாதிரி வெற்றி பெறுவார்கள். பாஜகவில் இருந்து அதிமுக விலகி வந்திருக்கிறது. அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் கூறியபடி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வில் இருந்து சட்ட திருத்தத்தை மேற்கொண்டு தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க முடியும் என்றார்.

click me!