கொரோனா பீதியில் மருத்துவர்கள் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் உயிரை காப்பற்றி வரும் நிலையில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூரைச் சேர்ந்த டெய்லர் தமிழ்மணி. இவர் தனது சொற்ப வருமானத்தில் தனது மகள் அகிலாவை (23) சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க வைத்தார். எம்பிபிஎஸ் இறுதியாண்டு முடித்து அகிலா ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணிபுரிந்தார். மார்ச் 28-ம் தேதியுடன் பயிற்சி மருத்துவர் பணி முடிந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க, அவரை மேலும் ஒரு மாதம் பணிபுரிய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், கடந்த வாரம் பயிற்சி முடித்ததற்கான சான்றை பெற பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவரும், அவரது நண்பர் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபஞ்சனும் (23) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக இவர்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மற்றொரு வாகனம் மோதியது. இதில், 3 பேரும் படுகாயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், பெண் மருத்துவர் அகிலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் இறுதிச்சடங்கிற்காக, சொந்த ஊரான பெரம்பலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம், சிவகங்கை அரசு மருத்துவமனை ஊழியர்களிடையே, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.