டாஸ்மாக்கில் பெட்டி பெட்டியா அள்ளுறாங்க... கடையை திறக்க வைத்து கச்சேரியை ஆரம்பித்த போலீஸார்..!

By Thiraviaraj RM  |  First Published Apr 22, 2020, 5:31 PM IST

போலீசார் தாங்கள் கொண்டு சென்ற பை, பாக்ஸ், அட்டை பெட்டிகளில்  பாட்டில்களை பதுக்கிக் கொண்டு இருக்கிறார்கள். 


சிவகங்கை, மானாமதுரை சப்-டிவிஷனில் ஆறு போலீஸ் ஸ்டேஷன் இருக்கிறது.  சில தினங்களுக்கு முன்பு இந்த சப்-டிவிஷனுக்கு உட்பட்ட டாஸ்மாக் கடைகளில் இருந்த சரக்குகளை பாதுகாப்பு கருதி டாஸ்மாக் அதிகாரிகள் குடோனுக்கு கொண்டு செல்லும்போது காவலுக்கு வந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள்  உள்ளிட்ட போலீசார் தாங்கள் கொண்டு சென்ற பை, பாக்ஸ், அட்டை பெட்டிகளில்  பாட்டில்களை பதுக்கிக் கொண்டு இருக்கிறார்கள். 

இதுகுறித்து எதிர்த்து கேட்ட டாஸ்மாக் ஊழியர்களிடம், ‘‘நூறு ரூபாய் குவார்ட்டரை நூற்றைம்பதுக்கு விற்றிருக்கிறீர்கள். உங்க ஆளுக என்னென்ன தப்பு செய்றாங்கன்னு நாங்கள் சொல்லி, நடவடிக்கை எடுக்கவா?’’என மிரட்டி இருக்கிறார்கள். எதுக்கு வீண் பிரச்னை என்று நினைத்து ஒதுங்கிக் கொண்ட டாஸ்மாக் பணியாளர்கள், போலீசார் எடுத்த பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள சரக்குகளுக்கு கணக்கை எப்படி சரிசெய்வது என்று தெரியாமல் இப்போது தவித்து வருகிறார்கள்.

Tap to resize

Latest Videos

இவற்றையெல்லாம் கண்காணிக்க நியமிக்கப்பட்ட உளவுப்பிரிவு போலீசார் சிலர், போலீசாரின் அடாவடித்தனங்களை ‘மொபைலில்’படம் எடுத்துள்ளனர். இதைப் பார்த்த ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர், ‘‘தம்பி உங்கள போல எத்தனை பேரை எங்க சர்வீஸ்ல பார்த்திருப்போம். உங்களுக்கு எதிராக பெட்டிசன் போட்டு தூக்கிட்டா மறுபடியும் எனக்கு கீழே தான் நீ வேலைக்கு வரணும்’’என்று அன்பாக மிரட்டி இருக்கிறார்கள். ஆனாலும் எதற்கும் அஞ்சாத ஒரு தனிப்பிரிவு போலீஸ் செல்போனில் வீடியோ பதிவு செய்ததை அப்படியே காவல்துறை மேலிடத்துக்கு அனுப்பி இருக்கிறார். நடவடிக்கை பாயுமா?

click me!