சிவகங்கை மாவட்டம் சிராவயலில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம். இப்போட்டிகளை காண பல்வேறு ஊர்களை சேர்ந்த மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து கண்டுரசிப்பர். இங்கு தொழு என அழைக்கப்படும் வாடிவாசலில் இருந்து மாடுகளை அவிழ்த்து விடும் முன்பாகவே, வாகனங்களில் மாடுகளை அழைத்து வருவோர் அவற்றை வயல்வெளி, கண்மாய் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் அவிழ்த்து விடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இதனால் பலர் காயம் அடைவதாகவும் புகார் எழுந்துள்ளது.
சிவகங்கையில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியின் போது ஆவேசமாக வந்த காளை எதிரில் தாய் மற்றும் குழந்தை இருப்பதைப் பார்த்து வேகத்தைக் கட்டுப்படுத்தி அவர்களை தாண்டி குதித்துச் சென்றம் சம்பவம் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் சிராவயலில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம். இப்போட்டிகளை காண பல்வேறு ஊர்களை சேர்ந்த மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து கண்டுரசிப்பர். இங்கு தொழு என அழைக்கப்படும் வாடிவாசலில் இருந்து மாடுகளை அவிழ்த்து விடும் முன்பாகவே, வாகனங்களில் மாடுகளை அழைத்து வருவோர் அவற்றை வயல்வெளி, கண்மாய் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் அவிழ்த்து விடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இதனால் பலர் காயம் அடைவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், மஞ்சுவிரட்டில் ஆவேசமடைந்த காளை ஒன்று திடீரென சீறிப்பாய்ந்து ஓடத் தொடங்கியது. அந்த சமயத்தில், காளையின் எதிரே ஒரு தாய் குழந்தையைச் சுமந்தவாறு நடந்து வந்துகொண்டிருந்தார். காளை, அவர்களை முட்டி தூக்கி வீசி விடுமோ என அங்கு இருந்தவர்கள் பயந்து கொண்டிருந்த வேலையில், தாயையும் குழந்தையையும் தாண்டி குதித்துச் சென்று சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விடியோவை பார்க்க : குழந்தையுடன் தாயைக் கண்டதும் தாண்டிச் சென்ற காளை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!