சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள துட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பூபாலன்(23). பாஸ்ட்புட் உணவகம் நடத்தி வருகிறார். இவர் மேகலா(21) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
தற்கொலைக்கு முயன்று தீவிர சிகிச்சையில் இருந்த கணவன் அபாய கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் கூறியதால் மனமுடைந்த மனைவி சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள துட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பூபாலன்(23). பாஸ்ட்புட் உணவகம் நடத்தி வருகிறார். இவர் மேகலா(21) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மீண்டும் இருவருக்கும் நேற்று சண்டை ஏற்பட்டதை அடுத்து பூபாலன் குருணை மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
undefined
இதையும் படிங்க: விஷச் சாராயத்தால் 57 பேர் பலி! சென்னையில் வைத்து முக்கிய குற்றவாளி கைது! இவர் என்ன செய்தார் தெரியுமா?
இதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பூபாலன் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் அபாய கட்டத்தில் இருப்பதாகவும் பிழைக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த மேகலா வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. செல்போனை தொடர்பு கொண்ட போது அழைப்பை எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் அவரை தேடிவந்தனர்.
இதையும் படிங்க: சாவு எப்படியெல்லாம் வருது பார்த்தீங்களா? எமன் ரூபத்தில் வந்த மாடு! பஸ் சக்கரத்தில் சிக்கி நீதிமன்ற ஊழியர் பலி!
இதனிடையே மேகலா, மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரத்தில் தனது துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு உறவினர்கள் தூக்கிச் சென்றனர். இதனால் அவசர சிகிச்சை பிரிவுக்குள் கூட்டநெரிசல் ஏற்பட்டது. அப்போது போலீசார் அவர்களை வெளியேற்ற முயன்றதால் இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் மேகலாவிடம் அவரது கணவரின் நிலையை பக்குவமாக தெரிவிக்காத மருத்துவரின் அலட்சியத்தால் தான் மேகலா உயிரிழந்தார் என்று கூறி போராட்டம் நடத்தினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.