ஒரே ஆண்டில் நான்காவது முறையாக நிரம்பி வழியும் மேட்டூர் அணை..! விவசாயிகள் பெருமகிழ்ச்சி..!

By Manikandan S R SFirst Published Nov 12, 2019, 10:51 AM IST
Highlights

மேட்டூர் அணை கட்டப்பட்டதில் இருந்து 45வது முறையாக நிரம்பியிருக்கிறது. இந்த வருடத்தில் மட்டும் நான்கு தடவை தனது முழு கொள்ளளவை மேட்டூர் அணை எட்டியுள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்கிறது. இதன்காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

இந்த நிலையில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை தற்போது எட்டியுள்ளது. மேட்டூர் அணை கட்டப்பட்டதில் இருந்து 45வது முறையாக நிரம்பியிருக்கிறது. இந்த வருடத்தில் மட்டும் நான்கு தடவை தனது முழு கொள்ளளவை மேட்டூர் அணை எட்டியுள்ளது. இதனையடுத்து அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் டெல்டா பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து 21,946 கன அடியாக இருக்கிறது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. தொடர்ந்து நான்காவது முறையாக இந்த வருடத்தில் மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

click me!