இன்ப அதிர்ச்சி கொடுத்த ஏடிஎம்... அழுத்தியது ரூ.200 வந்தது 500... அலைமோதிய மக்கள் கூட்டம்..!

By vinoth kumar  |  First Published Nov 8, 2019, 11:55 AM IST

வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் 200 ரூபாய் நிரப்ப வேண்டிய இடத்தில் 500 ரூபாய் நிரப்பியதால் இந்த குளறுபடி ஏற்பட்டிருக்கலாம் என்று கூறினர். மேலும் இதுவரை எவ்வளவு பணம் இதுபோன்று போனது என்று தெரியவில்லை. இதற்கான நஷ்டத்தை பணம் நிரப்பும் தனியார் நிறுவனமே ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 


சேலத்தில் ஏடிஎம் ஒன்றில் 200 ரூபாய்க்கு பதில் 500 ரூபாய் நோட்டுகள் வந்ததால் வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு பணத்தை எடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டியில் ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில், ரூ.200 எடுக்கும்  வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 வந்ததால் பொதுமக்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இந்த செய்தி சிறது நேரத்தில் காட்டுத் தீ போல அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. இதனையடுத்து, ஏ.டி.எம் இயந்திரத்தை நோக்கி மக்கள் படையெடுக்க துவங்கினர். ஏ.டி.எம்மில் குவிந்த மக்கள், இயந்திரத்தில் ரூ.200 பட்டனை அழுத்தி ரூ.500-ஆக எடுத்து சென்றுள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

இதுதொடர்பாக தகவல், வங்கி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து மையத்தைப் பூட்டினர். இதனால், அதிக பணம் எடுக்கும் ஆசையில் வந்த பலர் ஏமாற்றம் அடைந்தனர்.  

இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது பொதுத்துறை வங்கி ஏ.டி.எம். என்றாலும் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்தினர் செய்து வருகிறார்கள். அந்த வகையில் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் 200 ரூபாய் நிரப்ப வேண்டிய இடத்தில் 500 ரூபாய் நிரப்பியதால் இந்த குளறுபடி ஏற்பட்டிருக்கலாம் என்று கூறினர். மேலும் இதுவரை எவ்வளவு பணம் இதுபோன்று போனது என்று தெரியவில்லை. இதற்கான நஷ்டத்தை பணம் நிரப்பும் தனியார் நிறுவனமே ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

click me!