சேலம் மாவட்டம், எடப்பாடி - பூலாம்பட்டி பிரதான சாலையில், மது போதையில் இருந்த நபர் நடுரோட்டில் கோணிப்பை விரித்து படுத்து உறங்கியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன் எடப்பாடி - பூலாம்பட்டி பிரதான சாலையில், ஆலச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அனல் மின் நிலைய ஊழியரான சங்கர், மது போதையில் நடு ரோட்டில் படுத்திருந்த நிலையில், அவ்வழியாக வந்த வாகனம் அவர் தலை மீது ஏறி இறங்கியதால், அவர் துடிதுடித்து உயிரிழந்த சி சி டிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பட்டப்பகலில் இளம் பெண் கொடூரக்கொலை; பேசுவதை நிறுத்தியதால் ஆண் நண்பர் வெறிச்செயல்
undefined
இந்நிலையில் நேற்று மாலை எடப்பாடி தாவாந்தெரு பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர் மது போதையில் தள்ளாடியபடி எடப்பாடி - பூலாம்பட்டி பிரதான சாலையில் நடந்து வந்தார். திடீரென அவர் பிரதான சாலையின் நடுவே கோணிப்பை ஒன்றை விரித்து அதில் சாலையின் குறுக்கே நீண்டு படுத்தார். "யாராவது தில் இருந்தா என் மீது வண்டியை விடுங்கடா பாப்போம்" என்று தொடர்ந்து கூறியபடி நீண்ட நேரமாக சாலையின் குறுக்கே படுத்திருந்தார்.
மனைவியின் நினைவாக அரசுப்பள்ளியை பணத்தை அள்ளி கொடுத்த தொழிலதிபர்
மது போதையில் இருந்த அவரை அவ்வழியாக வந்தவர்கள் அங்கிருந்து எழுந்து செல்லும்படி கூறிய போதும், அவர் யாரையும் பொருட் படுத்தாமல் நீண்ட நேரமாக பிரதான சாலையின் குறுக்கே படுத்து இருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வரும் நிலையில், அடிக்கடி இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள் அரங்கேறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.