கள்ளக்காதலியின் கணவரிடம் சரமாரியாக அடிவாங்கிய அரசு ஊழியர்..! போலீசார் அடித்ததாக மனைவியிடம் நாடகம்..!

By Manikandan S R S  |  First Published Apr 3, 2020, 2:21 PM IST

மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் இளம்பெண் ஒருவருடன் பழனிச்சாமிக்கு கள்ளக்காதல் இருந்துள்ளது. பழகுனர் பயிற்சிக்கு வந்த இளம்பெண்ணை மயக்கி நிரந்தர வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி பழனிச்சாமி நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இது அப்பெண்ணின் கணவருக்கு தெரியவரவே மனைவியை கண்டித்திருக்கிறார். அதன் பிறகு பழனிசாமியுடன் பழகுவதை இளம்பெண் நிறுத்திக் கொண்டார்.


சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. 48 வயதான இவர் மின்வாரிய ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 38 வயதில் மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மக்களின் அத்தியாவசிய தேவைகளில் மின்சாரம் இருப்பதால் மின்வாரியம் தடையின்றி செயல்பட்டு வருகிறது. இதனால் பழனிச்சாமியும் தினமும் பணிக்குச் சென்று வந்தார்.

Tap to resize

Latest Videos

undefined

கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் அலுவலகம் சென்ற அவர் சக ஊழியர்களிடம் தன்னை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் வந்ததாக கூறி அடித்து தாக்கியதாக கூறியிருக்கிறார். அது குறித்து மின்வாரிய ஊழியர்கள் விசாரித்தபோது மேட்டூர் அணையை ஒட்டி இருக்கும் சுரங்க மின் நிலையத்தில் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது இந்தியன் வங்கி முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இருந்ததாகவும் தனது வாகனத்தை நிறுத்தி விசாரித்தவர்கள் மின்வாரிய ஊழியர் என்று கூறியும் அதை நம்பாமல் தாக்கியதாகவும் லத்தியால் அடித்து உடம்பில் காயங்களை ஏற்படுத்தியதாக காட்டியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அவர் கூறியதை நம்பி உடனடியாக மின் வாரிய தலைவர் மூலமாக காவல்துறையில் புகார் அளித்தனர். மேலும் பணிக்கு சென்ற மின்வாரிய ஊழியரை போலீசார் சரமாரியாக தாக்கியதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களுடன் பதிவிடவும் செய்தனர். 

புகாரின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியது யார் என காவல்துறை டிஎஸ்பி விசாரணை நடத்தியுள்ளார். விசாரணையில் இந்தியன் வங்கி முன்பு பாதுகாப்பில் இருந்த போலீசார் யாரையும் தாக்கவில்லை என கூறியுள்ளனர். இதனால் குழப்பமடைந்த காவல்துறை அதிகாரி அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராகளையும் ஆய்வு செய்தார். அதில் அவ்வாறு ஒரு தாக்குதல் நடந்ததற்கான எந்தவித பதிவுகளும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மின்வாரிய ஊழியர்கள் முன்னிலையில் பழனிசாமியுடன் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல்களை தகவல்களை பழனிச்சாமி தெரிவித்து இருக்கிறார்.

மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் இளம்பெண் ஒருவருடன் பழனிச்சாமிக்கு கள்ளக்காதல் இருந்துள்ளது. பழகுனர் பயிற்சிக்கு வந்த இளம்பெண்ணை மயக்கி நிரந்தர வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி பழனிச்சாமி நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இது அப்பெண்ணின் கணவருக்கு தெரியவரவே மனைவியை கண்டித்திருக்கிறார். அதன் பிறகு பழனிசாமியுடன் பழகுவதை இளம்பெண் நிறுத்திக் கொண்டார். ஆனால் அவரை விடாத பழனிச்சாமி தொடர்ந்து அவருக்கு தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் தனது கணவரிடம் அது குறித்து கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர் கடந்த செவ்வாய்க்கிழமை தனது மனைவி மூலம் பழனிச்சாமியை வீட்டிற்கு வரச்சொல்லி அழைத்திருக்கிறார்.

பழனிச்சாமியும் கள்ளக்காதலி அழைக்கிறார் என்று உற்சாகத்தில் தனது வீட்டுக்கு செல்லாமல் வேலையை முடித்துவிட்டு இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு வீட்டிற்குள் பழனிசாமி சென்றதும் இளம்பெண் கதவை பூட்டி தாழிட்டார். உடனே வீட்டிற்குள் இருந்து வந்த அப்பெண்ணின் கணவர் பழனிச்சாமியை சரமாரியாக அடித்து உதைத்து இருக்கிறார். இதில் அவர் பலத்த காயம் அடையவே வெளியே தெரிந்தால் பிரச்சனையாகிவிடும் என்று போலீசார் அடித்ததாக வீட்டிலும் தன்னுடன் பணிபுரியும் ஊழியர்களிடமும் கூறி நாடகமாடி இருக்கிறார். இந்த தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள் காவல் துறை குறித்து அவதூறு பரப்பி சக ஊழியர்களிடமும் தவறான தகவலை தெரிவித்ததாக பழனிச்சாமியை இடைநீக்கம் செய்தனர். 

பழனிசாமியின் தவறான தகவலால் காவல்துறை குறித்து சமூக வலைத்தளங்களில் பொய் செய்தி வெளியிட்டதற்காக மின் வாரிய ஊழியர்கள் போலீசாரிடம் வருத்தம் தெரிவித்தனர்.

click me!