அனைத்து மாவட்டங்களும் கொரோனா வைரஸ் பரவும் பகுதியாக அறிவிப்பு.. பொதுமக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு.!

By vinoth kumar  |  First Published Apr 2, 2020, 11:15 AM IST

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். இப்படியே போனால் ஊரடங்கையும் நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ள பகுதியாக அரசு அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனால் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிய போதும் தமிழகத்தில் அதிகரிக்காமல் இருந்தது.இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் என்ற பகுதியில் கடந்த மாதம் 13 முதல் 15-ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது.

Latest Videos

undefined

இதில் தமிழ்நாட்டில் இருந்து 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் 1500 பேரையும் தனிமைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் நேற்று வரை 500-க்கும் மேற்பட்டோரை அடையாளம் கண்டனர். அவர்களில் 45-க்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டதால், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 200க்கும் மேற்பட்டவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதனால் எண்ணிக்கை 234ஆக உயர்ந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். இப்படியே போனால் ஊரடங்கையும் நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

click me!