பேராசிரியர் பாலியல் தொல்லை..? கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய மாணவி..!

Published : Jan 12, 2020, 11:01 AM ISTUpdated : Jan 12, 2020, 11:03 AM IST
பேராசிரியர் பாலியல் தொல்லை..? கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய மாணவி..!

சுருக்கம்

மாணவி பயிலும் துறையில் இருக்கும் பேராசிரியர் ஒருவர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாணவி தூக்கிட்ட செய்தி தெரிந்தும் 5 மணி நேரமாக பல்கலைக்கழக துணை வேந்தர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்றும், பாலியல் தொல்லையால் பலியானதை கல்லூரி நிர்வாகம் மறைக்க முயற்சிப்பதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் நிவேதிதா. சேலம் மாவட்டம் ஓமலூரில் இருக்கும் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை இரண்டாமாண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் இவர் விடுமுறை தினங்களில் ஊருக்கு சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று மாணவியின் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அவரது தோழிகள் சிலர் அவரை பார்க்க வந்தபோது அவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தார்.

அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அலறினர். மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டு விடுதி காப்பாளர்கள் விரைந்து வந்துள்ளனர். பின் நிவேதிதாவின் தற்கொலை குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவலர்கள் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்கொலை வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே மாணவி பயிலும் துறையில் இருக்கும் பேராசிரியர் ஒருவர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாணவி தூக்கிட்ட செய்தி தெரிந்தும் 5 மணி நேரமாக பல்கலைக்கழக துணை வேந்தர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்றும், பாலியல் தொல்லையால் பலியானதை கல்லூரி நிர்வாகம் மறைக்க முயற்சிப்பதாகவும் புகார் தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

PREV
click me!

Recommended Stories

சேலத்தில் பரபரப்பு! திமுக பிரமுகர் சுட்டுக்கொ*லையால் அதிர்ச்சி!
35 வயதில் பலான வேலையை செய்து விட்டு 60 வயதில் சிக்கிய நல்லதம்பி! 25 வருஷத்துக்கு பின் பிடிப்பட்டது எப்படி?