பல இடங்களில் திமுக மற்றும் அதிமுக வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாக சுயேட்சைகள் இருக்கின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக சுயேட்சைகளின் ஆதரவை பெறுவதற்காக இருகட்சிகளுமிடையே கடும் போட்டி நிலவி வந்தது.
தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு பிறகு வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பது போடப்பட்டது. தேர்தலில் மக்கள் அளித்த வாக்குகள் ஜனவரி 2 ம் தேதி எண்ணப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி அன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி மறுநாள் நண்பகல் கடந்தும் நீடித்தது.
undefined
வாக்குஎண்ணிக்கையின் முடிவில் அதிகமான ஊராட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சிலர் பகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருந்தது. ஆளும் அதிமுகவுக்கு சிறு பின்னடைவு ஏற்பட்டதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும் சில மாவட்டங்களில் அதிமுக கூட்டணி அதிகமான இடங்களை பெற்றிருந்தது. இந்தநிலையில் மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
பல இடங்களில் திமுக மற்றும் அதிமுக வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாக சுயேட்சைகள் இருக்கின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக சுயேட்சைகளின் ஆதரவை பெறுவதற்காக இருகட்சிகளுமிடையே கடும் போட்டி நிலவி வந்தது. 27 மாவட்டங்களில் மொத்தம் 10 ஆயிரத்து 306 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. முடிவுகள் இன்று மதியத்திற்குள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.