மாணவி வீட்டினுள் இருந்த அறைக்குள் பள்ளிச் சீருடையை மாற்ற சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்கவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது அம்மா கதவை தட்டியும் திறக்கவில்லை. பின்னர், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்த போது மாணவி வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைத்து நெஞ்சில் அடித்துக்கொண்டு கத்தி கதறினார்.
சேலம் அருகே அரசு பள்ளி மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பாம்பாட்டி நாயக்கர் தெரு பகுதியில் வசித்து வருபவர் அரசு பேருந்து ஓட்டுனரான மகேஸ்வரன்(35). இவருக்கு திருமணமாகி சுகன்யா என்கிற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த இவரது மகள் நேற்று காலை பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார்.
பின்னர், மாணவி வீட்டினுள் இருந்த அறைக்குள் பள்ளிச் சீருடையை மாற்ற சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்கவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது அம்மா கதவை தட்டியும் திறக்கவில்லை. பின்னர், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்த போது மாணவி வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைத்து நெஞ்சில் அடித்துக்கொண்டு கத்தி கதறினார்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பள்ளி மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்துகொண்ட அறையை சோதனையிட்ட போது ஒரு கடிதம் சிக்கியது. அதில், என்னுடைய சாவிற்கு யாரும் காரணமில்லை. யாரையும் துன்புறுத்த வேண்டாம் என்று அதில் குறிப்பட்டிருந்தார். இதனையடுத்து மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் ஆசிரியர்கள் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.