Ration shops: குடும்ப அட்டைத்தாரர்களுக்கு குட் நியூஸ்.. இனி ரேஷனில் இது கட்டாயம்.. மாஸ் காட்டும் தமிழக அரசு.!

By vinoth kumarFirst Published Feb 16, 2022, 9:40 AM IST
Highlights

பொது வினியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் விவரங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், நியாயவிலைக் கடைகளில் இந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படுவதில்லை. இந்நிலையில், இதனை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

நியாயவிலை கடைகளில் இருப்பில் உள்ள பண்டங்களின் விவரங்களை குடும்ப அட்டைத் தாரர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் தினமும் காட்சிப்படுத்த வேண்டும் என்று  உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

பொது வினியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் விவரங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், நியாயவிலைக் கடைகளில் இந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படுவதில்லை. இந்நிலையில், இதனை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்;- பொது விநியோகத்திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில் அட்டைதாரர்கள் கவனத்துக்கு, தகவல்கள் அடங்கிய தகவல் பலகைகள் பராமரித்து வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், தகவல் பலகைகள் ரேஷன் கடைகளில் சரிவர பராமரிக்கப்படுவதில்லை என தெரிய வருகிறது.

எனவே, அனைத்து ரேஷன் கடைகளிலும், வேலை நேரம், பொருட்களின் ஆரம்ப இருப்பு, விநியோகிக்கப்பட்டது, இறுதி இருப்பு உள்ளிட்ட தினசரி விவரங்கள், பொருட்களின் அளவு மற்றும் விற்பனை விலை, ரேஷன் கடை தொடர்பான புகார் தெரிவிக்க உணவுப்பொருள் வழங்கல் அமைச்சர், துறை செயலாளர், உணவுப்பொருள் வழங்கல் ஆணையர், சென்னை மாவட்ட துணை ஆணையர், மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர், மாவட்டவழங்கல் அலுவலர் உள்ளிட்டோரின் தொலைபேசி எண்கள் அடங்கிய தகவல் பலகை காட்சிப்படுத் தப்பட வேண்டும்.

இந்த நடைமுறைகள் முழுமையாக செயல்படுத்தப்படுவதற்கு தொடர்புடைய மாவட்ட வழங்கல்அலுவலர், துணை ஆணையர் ஆகியார் முழு பொறுப்புடையவர்கள் ஆவர். இந்த சுற்றறிக்கையின் மீதான பணி முன்னேற்றம் குறித்த நிறைவு அறிக்கை மார்ச் 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நியாயவிலைக்கடை தொடர்பாக புகார் அளிக்க உணவுத்துறை அமைச்சர் 044 25671427, உணவுத்துறை செயலாளர் 044 25672224, உணவுப்பொருள் வழங்கல் ஆணையாளர் 044 28592255 உள்ளிட்டோரின் எண்கள் இடம்பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

click me!