தமிழகத்தில் உள்ள 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் 2.18 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது குடும்ப அட்டைகளுக்கு ஆன்லைன் பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி உடனடியாக வழங்க அனைத்து நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்களுக்கும் உணவுத்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் 2.18 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது குடும்ப அட்டைகளுக்கு ஆன்லைன் பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதற்கென, ஒவ்வொரு ரேஷன் கடைக்கும், இணையம் வாயிலாக இயங்கும் மின் சாதனம் வழங்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர் கைரேகை பதித்த பிறகு பொருட்கள் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. சர்வரில் அடிக்கடி ஏற்படும் பிரச்னையால் இணைய வேகம் குறைந்து இம்மின் சாதனம் சரி வர இயங்குவதில்லை. இந்த சாதனம், '2ஜி நெட் ஒர்க்கில் இயங்குவதால் வேகமாக இருக்காது. வாரத்தில் நான்கு நாட்கள் கோளாறு ஏற்பட்டு பொருட்கள் வழங்குவதில் தடங்கள் ஏற்படுவதாக ரேஷன் கடை ஊழியர்கள் புலம்பு வந்தனர்.
பல மணி நேரம் காத்திருக்கும் மக்கள் வெறும் கையுடன் வீட்டுக்கு திரும்பவதுடன், கோபத்தில் ரேஷன் கடை ஊழியர்களுடன் தகராறில் ஈடுபடுகின்றனர். பல குடும்ப அட்டைதார்களின் கைரேகை இயந்திரத்தில் பதிவாவதில்லை. ரேஷன் கடைகளை பொறுத்தவரை இது தீராத பிரச்னையாக இருந்து வருகிறது. இதன் காரணமாகவே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் போது, கைரேகை பதிவு வேண்டாம் என நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கைரேகை பதிவு அங்கீகரிக்கப்படாவிட்டாலும், விற்பனை முனைய இயந்திரத்தில் குடும்ப அட்டையின் எண்ணை பதிவு செய்து, பதிவேட்டில் ஒப்புதல் பெற்று குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி உடனடியாக வழங்க அனைத்து நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.