லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய ஜெகன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜெகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஓமலூர் அருகே திருமணமாகி 15 நாட்களே ஆன புது மாப்பிள்ளை சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை வித்யா நகரை சேர்ந்தவர் ஜெகன். இவர் மேட்டூரில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், ஜெகன் சேலத்திலிருந்து மேட்டூருக்கு வழக்கம் போல இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது, ஓமலூர் தாலுகா அலுவலகம் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் செல்லும் போது லாரியை முந்தி செல்ல முயற்பட்ட போது பாலத்தின் சுவற்றில் மோதி லாரியின் பின் சக்கரத்தில் சிக்கினார்.
இதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய ஜெகன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜெகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சாலை விபத்தால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருமணமாகி 15 நாட்களே ஆன நிலையில் வங்கி ஊழியர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.