சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 13 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 6 பேர் திமுக, 6 பேர் அதிமுக, ஒருவர் பாமகவை சேர்ந்தவர்கள். ஒன்றிய குழுத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில், ஒன்றியக் குழுத் தலைவர் ஜெகநாதன் மீது ஒன்றியக்குழு கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
கத்திமுனையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அதிமுக ஊராட்சி ஒன்றிய பெண் உறுப்பினர்கள் இருவர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பங்கேற்று திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 13 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 6 பேர் திமுக, 6 பேர் அதிமுக, ஒருவர் பாமகவை சேர்ந்தவர்கள். ஒன்றிய குழுத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில், ஒன்றியக் குழுத் தலைவர் ஜெகநாதன் மீது ஒன்றியக்குழு கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், நேற்று ஒன்றியக் குழு உறுப்பினர்களான 2 பெண் கவுன்சிலர்கள் சங்கீதா மற்றும் பூங்கொடி ஆகியோர் திமுகவினரால் கத்திமுனையில் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பெயரில் தேர்தலை நடத்தக் கூடாது என வலியுறுத்தி அதிமுகவினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதனிடையே, திமுகவினரால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 2 அதிமுக பெண் கவுன்சிலர்கள் பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழு கூட்டத்தில் திடீரென கலந்துகொண்டு திமுக உறுப்பினருக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அதிமுக வார்டு உறுப்பினர்களான பெண்கள் கூறும்போது;- தங்களை யாரும் கடத்தவில்லை தாமாக விருப்பப்பட்டு தான் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தனர்.