வடகிழக்குப் பருவமழை முடிந்து பனி காலம் தொடங்கி விட்டது. இரவிலும் அதிகாலையிலும் குளிர் வாட்டினாலும் பகல் நேரங்களில் பங்குனி வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், வட கடலோர தமிழகம், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் புதுச்சேரியில் இன்று வட கடலோர மாவட்டங்களில் முதல் 3 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை முடிந்து பனி காலம் தொடங்கி விட்டது. இரவிலும் அதிகாலையிலும் குளிர் வாட்டினாலும் பகல் நேரங்களில் பங்குனி வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், வட கடலோர தமிழகம், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
undefined
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: 5-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். இதர மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 6-ம் தேதி வட கடலோர தமிழகம், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.
சென்னையை பொறுத்த வரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதர மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவுகிறது. மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.