சேலத்தில் தடுப்பூசி போட்ட பிறகு சுகாதாரத்துறை அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் தடுப்பூசி போட்ட பிறகு சுகாதாரத்துறை அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா உள்ளிட்ட 210க்கும் மேற்பட்ட நாடுகளிலும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீவிரமாக பரவிய கொரோனா தொற்று டிசம்பர் மாதத்தில் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து, இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசரத் தேவைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மார்ச் 1ம் தேதியில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 முதல் 59 வயதுள்ளவர்களில் இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சேலத்தில் பணியாற்றும் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஆனால், அவருக்கு திடீரென்று சளி, காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில், அவருக்கு தொற்று உறுதி உறுதியானதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா தடுப்பூசி போட்ட பிறகும் சுகாதாரத்துறை அதிகாரிக்கு கொரோனா பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.