ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்து சண்முகத்தை வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளனர்.
சேலத்தில் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரான அதிமுக நிர்வாகி சண்முகம் கொலை வழக்கில் 55வது வார்டு திமுக கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி செயலாளர் சண்முகம் (54). இவருக்கு அம்பாள் ஏரி ரோடு பகுதியில் ரியல் எஸ்டேட் அலுவலகம் உள்ளது. நேற்று இரவு ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் இருந்து பணியை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்துக்கொண்டிருந்தார். அப்போது தாதகாப்பட்டி இட்டேரி சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்து சண்முகத்தை வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஸ்கெட்ச் போட்டு எங்க கட்சிக்காரரை வெட்டி கொன்னுட்டாங்க! யாருக்கும் பாதுகாப்பு இல்லை! இபிஎஸ் சொன்ன பகீர் தகவல்!
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும், உறவினர்கள் மற்றும் அதிமுகவினர் என ஏராளமான குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சண்முகத்தை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின், போலீசார், கொலை செய்யப்பட்ட சண்முகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனிடையே சண்முகம் படுகொலைக்கு 55வது வார்டு கவுன்சிலர் தனபாக்கியம் கணவர் சதிஷை கைது செய்யக்கோரி உறவினர்கள் கோரிக்கை விடுத்து உடலை வாங்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சியை தொடர்ந்து விழுப்புரத்தில் அடுத்த அதிர்ச்சி! கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக! அன்புமணி!
இந்நிலையில், தற்போது சதீஷை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை இந்த கொலை சம்பந்தமாக அருண்குமார், முருகன், பாபு, மாது, சீனி, செல்வம் உட்பட 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.