இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து பயங்கர மோதல்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு..!

Published : Nov 17, 2019, 11:08 AM IST
இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து பயங்கர மோதல்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு..!

சுருக்கம்

சேலம் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  

சேலம் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த வெள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரா (40). இவர் மகள் நித்யா(18), மகன் சக்திவேல்(16) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் கெங்கவல்லி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது விரகனூர் அருகே எதிரே வந்த தனியார் பேருந்து அசுர வேகத்தில் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கிவீசப்பட்ட 3 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.

இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

சேலத்தில் பரபரப்பு! திமுக பிரமுகர் சுட்டுக்கொ*லையால் அதிர்ச்சி!
35 வயதில் பலான வேலையை செய்து விட்டு 60 வயதில் சிக்கிய நல்லதம்பி! 25 வருஷத்துக்கு பின் பிடிப்பட்டது எப்படி?