'எங்கள பிரிச்சுறாதீங்க.. ஒன்னா சேர்ந்து வாழ விடுங்க' என்று காவல்நிலையத்தில் அவர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கலங்கச் செய்தது. பின் இருவரும் மேஜர் என்பதால் திருமணத்தை பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
சேலத்தைச் சேர்ந்தவர் கிருத்திகா. புதுவையில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் விழுப்புரம் மாவட்டம் வி.அகரம் காலணியைச் சேர்ந்த விமல் என்கிற வாலிபரும் பணியாற்றி வந்துள்ளார். முதலில் நண்பர்களாக பழகிய இருவரும் நாளடைவில் காதலிக்க தொடங்கியுள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் காதலித்து வந்திருக்கின்றனர்.
undefined
இவர்களின் காதல் விஷயம் பெண் வீட்டாருக்கு தெரிய வந்துள்ளது. இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு கடுமையான எதிர்ப்பை கிருத்திகாவின் பெற்றோர் தெரிவித்திருக்கின்றனர். அவருக்கு அவசர அவசரமாக திருமணம் முடித்து வைக்க மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய கிருத்திகா, வளவனூர் ரெஜிஸ்டர் அலுவலகத்தில் வைத்து விமலை பதிவு திருமணம் செய்துள்ளார்.
இதனிடையே கிருத்திகாவின் பெற்றோர், விமல் தங்கள் மகளை கடத்தி சென்ற விட்டதாக சேலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய காவலர்கள், வளவனூரில் இருவரும் இருப்பதை அறிந்து அங்கு சென்றனர். கிருத்திகாவையும் விமலையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றனர். காதல் ஜோடிகள் இருவரும், தங்களை பிரித்து விடுவார்கள் என்று பயந்து கைகளை இறுக பற்றிக்கொண்டனர்.
'எங்கள பிரிச்சுறாதீங்க.. ஒன்னா சேர்ந்து வாழ விடுங்க' என்று காவல்நிலையத்தில் அவர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கலங்கச் செய்தது. பின் இருவரும் மேஜர் என்பதால் திருமணத்தை பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மகள் கடத்தப்பட்டதாக பொய் புகார் அளித்த கிருத்திகாவின் பெற்றோரை எச்சரித்த காவலர்கள், கிருத்திகாவை அவரது கணவர் விமலுடன் அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ஒரு நாள் தலைமை ஆசிரியை..! அதிரடியாக செயல்பட்டு அசத்திய அரசு பள்ளி மாணவி..!