Breaking: சேலம் பட்டாசு கிடங்கில் பயங்கர தீ விபத்து; பெண் உள்பட 3 பேர் உடல் கருகி பலி

By Velmurugan s  |  First Published Jun 1, 2023, 6:46 PM IST

சேலம் மாவட்டம் சர்கார் கொல்லப்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு கிடங்கில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் மாவட்டம் சர்கார் கொல்லப்பட்டி பகுதியில் தனியார் பட்டாசு கடைக்கான பட்டாசு சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வந்துள்ளது. இந்த கிடங்கில் வழக்கம் போல் இன்றும் பணியாளர்கள் பணி செய்து கொண்டு இருந்தனர். சுமார் 12 தொழிலாளர்கள் பணி செய்து கொண்டு இருந்த நிலையில் திடீரென பலத்த வெடி சத்தம் கேட்டுள்ளது.

வெடி சத்தத்தைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது ஒட்டுமொத்த கட்டிடமும் இடிந்து விழுந்து சேதமடைந்தது. மேலும் அப்பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 6 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Latest Videos

தாம்பூல பையில் குவாட்டர் பாட்டில் சேர்த்து கொடுத்த கல்யாண வீட்டார்

உயிரிழந்தவர்கள் நடேசன், சதீஷ் என்பதும் பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நிலையில் இருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

திருமணமான ஒரே மாதத்தில் காதல் மனைவியை கழுத்தை நெறித்து கொன்ற கணவன்; பெண் வீட்டார் கதறல் 

click me!