எவ்வளவு சொன்னாலும் திருந்தாத ஜென்மங்கள்... இந்த 21 நாள் கறி சாப்பிடலனா குடியா மூழ்கிபோயிடும்..!

By vinoth kumar  |  First Published Apr 5, 2020, 12:12 PM IST

ஞாயிற்றுக்கிழமைகள் அன்று இறைச்சி சாப்பிட்டே தீரவேண்டும் என்ற எண்ணம் பொதுமக்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ள நிலையில், ஆட்டு இறைச்சிகள் விலை அதிகரித்தாலும் ஒரு கிலோ வாங்க கூடிய இடத்தில் அரைகிலோவாவது வாங்கி சாப்பிட வேண்டும் என்பதற்காக இறைச்சி வாங்குவதற்காக மக்கள் ஆட்டு இறைச்சி கடைகளில் கூட்டமாக கூடி இருக்கின்றனர்.


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் ஆட்டிறைச்சி, மீன் கடைகளில் குவிந்துள்ளதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் ஒவ்வொருவராக அனுமதிக்கப்பட்டுகின்றனர். 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சமூக இடைவெளி மற்றும் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு தகுந்தார்போல் ஏப்ரல் 14-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பேருந்து, ரயில் உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான மளிகை மற்றும் காய்கனி கடைகள், காய்கனி சந்தைகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. 

Tap to resize

Latest Videos

undefined

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, சேலம் மாவட்டத்தில் செயல்பட்ட சந்தைகள் மற்றும் உழவர் சந்தைகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்தே காய்கனிகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று காய்கனிகள் வாங்கி சென்றனர். இதனை தவிர்க்கும் விதமாக மார்க்கெட்டுகள் மற்றும் உழவர் சந்தையில் செயல்பட்ட கடைகள் பூங்கா, விளையாட்டு மைதானங்களுக்கு மாற்றப்பட்டன. நெல்லையில் உழவர்சந்தைகள் அனைத்தும் இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களுக்கு மாற்றப்பட்டன. இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் இந்த முறையை பின்பற்றினர். அங்கு மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒவ்வொரு கடையிலும் ஒரு மீட்டர் இடைவெளியில் நீண்ட வரிசையாக வட்டமிடப்பட்டது. அதற்குள் நின்று மக்கள் காய்கனிகளை வாங்கி செல்கின்றனர். 

இந்நிலையில், எப்போதும் ஞாயிற்றுக்கிழமைகள் அன்று இறைச்சி சாப்பிட்டே தீரவேண்டும் என்ற எண்ணம் பொதுமக்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ள நிலையில், ஆட்டு இறைச்சிகள் விலை அதிகரித்தாலும் ஒரு கிலோ வாங்க கூடிய இடத்தில் அரைகிலோவாவது வாங்கி சாப்பிட வேண்டும் என்பதற்காக இறைச்சி வாங்குவதற்காக மக்கள் ஆட்டு இறைச்சி கடைகளில் கூட்டமாக கூடி இருக்கின்றனர்.

ஆனாலும்,  சேலம் டால்மியாபுரத்தில் போலீஸ் பாதுகாப்புடன் மக்கள் ஆட்டிறைச்சி வாங்கிச் செல்கின்றனர். இதேபோல், சென்னையிலும் பல இடங்களில் இறைச்சி கடைகளில் அதிக மக்கள் ஒரே நேரத்தில் திரண்டு கறி வாங்கி சென்றனர். கோவையிலும் பல பகுதிகளிலும் இதே நிலை தான் காணப்பட்டது.

click me!