கொரோனா பரவல் அதிகரிப்பு... சேலத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Aug 8, 2021, 6:56 PM IST
Highlights

கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து சேலம் மாநகரில் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், மால்கள் உள்ளிட்டவை, நாளை முதல் 23-ம் தேதி வரை தினமும் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து சேலம் மாநகரில் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், மால்கள் உள்ளிட்டவை, நாளை முதல் 23-ம் தேதி வரை தினமும் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று 91 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 5 பேர் உயிரிழந்தனர். இதுவரை, சேலம் மாவட்டத்தில் மொத்தம் 835 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று அதிகரித்து வருவதால், நாளை முதல் சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளை விதித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில்;- சேலம் மாநகர எல்லைக்குள் செயல்படும் அனைத்து மால்கள், ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்கள் ஆகியவை மாலை 6 மணிவரை மட்டும் செயல்பட அனுமதி. வணிக நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை செயல்பட அனுமதியில்லை.

செவ்வாய்பேட்டை மெயின்ரோடு, நாவலர் நெடுஞ்செழியன் சாலை, லாங்லி நோடு, பால் மார்க்கெட், லீபஜார், வீரபாண்டியார் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மாலை 6 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி. வ.உ.சி மார்க்கெட், சின்னகடை வீதி ஆகிய இடங்களில் செயல்படும் பூ, பழம் மற்றும் காய்கறி கடைகள் மாலை 6.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறுகளில் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு முழுவதும் தடை விதிக்கப்படுகிறது. பிற நாட்களில் ஏற்காட்டிற்குப் பயணிக்கும் பயணிகள் கோவிட்-19 கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்தி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். கொங்கணாபுரம் வாரச்சந்தை, வீரகனூர் வாரச்சந்தை,வரும் 23ஆம் தேதி வரை செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.

click me!