சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. எச்சரிக்கும் வானிலை மையம்..!

By vinoth kumarFirst Published Jul 6, 2021, 1:39 PM IST
Highlights

உள் தமிழ்நாட்டில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக பெரம்பலூர், அரியலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை , தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.

தமிழகத்தில் இன்று பெரம்பலூர், அரியலூர், சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- உள் தமிழ்நாட்டில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக பெரம்பலூர், அரியலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை , தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், பிற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

7ம் தேதியன்று தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், பிற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அதேபோல், 8ம் தேதியன்று வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.

9ம் தேதி மற்றும் 10ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச போச்சம்பள்ளி, ஆரணி தலா 9 செ.மீ., போளூர் 8 செ.மீ., தாளவாடி, பந்தலூர் 5 செ.மீ., உசிலம்பட்டி  4 செ.மீ., காரைக்குடி  3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.  மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

click me!