#BREAKING சேலத்தில் போலீசார் தாக்கியதில் படுகாயம்.. விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு..!

By vinoth kumarFirst Published Jun 23, 2021, 12:12 PM IST
Highlights

சேலம் வாழப்பாடி அருகே போதையில் வாகனம் ஓட்டி வந்தவரை வழிமறித்து போலீசார் தாக்கியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் வாழப்பாடி அருகே போதையில் வாகனம் ஓட்டி வந்தவரை வழிமறித்து போலீசார் தாக்கியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முருகேசன்(40). இவருக்கு அன்னக்கிளி என்ற மனைவியும், இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர் வாழப்பாடி சாலையில் மளிகை மற்றும் பழக்கடைகளை நடத்தி வருகிறார். இந்நிலையில், சேலத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால், பக்கத்து மாவட்டத்திற்கு சென்று முருகேசன் மற்றும் அவரது நண்பரும்  மது அருந்தி விட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். கல்வாரயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி வனத்துறை சோதனை சாவடி அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் முருகேசன் மற்றும் அவரது நண்பரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். 

அப்போது, குடிபோதையில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறத. இதனால், ஆத்திரமடைந்த போலீசார் முருகேசனை தாக்கியுள்ளனர். இதில், நிலைதடுமாறு கீழே விழுந்த முருகேசனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே ஆம்புலன்ஸ் வரழைக்கப்பட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை பரிதாபமாக முருகேசன் உயிரிழந்தார். 

உடனே இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் முருகேசனை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஏத்தாப்பூர் காவல் நிலைத்தை முற்றுகையிட்டு புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!