காரணம் அத்தியாவசியப் பொருட்களை வாங்க செல்வதாக மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே சுற்றுவது அதிகரித்து காணப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக மே 24ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் நன்பகல் வரை இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் பொருட்டு காலை பத்து மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.
அதேபோல் பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கடைகளிலேயே பொருட்களை வாங்க அறிவுறுத்தப்படுகிறார்கள். வெகுதூரம் செல்ல முயற்சிப்பவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. காரணம் அத்தியாவசியப் பொருட்களை வாங்க செல்வதாக மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே சுற்றுவது அதிகரித்து காணப்பட்டது. இதனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போதும், கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் என்பதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
சேலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக உழவர் சந்தை உள்ளிட்ட சந்தைகள் மூடப்பட்டன. இதனால் ஆத்தூர் உழவர் சந்தைக்கு காய்கறி கொண்டு வந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து ஆத்தூர் நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி வாகனங்களில் நடமாடும் உழவர் சந்தை திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டம் மூலம் வீடு வீடாக சென்று காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீட்டு வாசலுக்கே வந்து விற்பனையாகும் காய்கறிகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இந்த திட்டத்தை பிற மாவட்டங்களிலும் செயல்படுத்தனால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரலாம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.