சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குழந்தைகளின் கண் முன்னே காவிரி ஆற்றில் மூழ்கி கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள ஆவடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜனார்த்தனன் (வயது27), பவித்ரா (24) தம்பதி. இவர்கள் இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தங்களது குடும்பத்துடன் எடப்பாடி அருகே பூலாம்பட்டிக்குச் சென்றுள்ளனர்.
காவிரி ஆற்றில் இரண்டு குழந்தைகளையும் ஆற்றங்கரையில் அமர வைத்துவிட்டு தம்பதியர் இருவரும் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். இந்நிலையி்ல் கணவன், மனைவி இருவரும் குளித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென நீரில் மூழ்கியுள்ளனர். அப்போது அப்பகுதியில் யாரும் இல்லாத காரணத்தால் அவர்களை உடனடியாக காப்பாற்ற இயலவில்லை என்று கூறப்படுகிறது.
பாலியல் தொல்லை தாங்கமுடியவில்லை; சுவர் ஏறி குதித்து தப்பித்த சிறுவன் - பெண் காப்பாளர் கைது
இதனைத் தொடர்ந்து நீரில் மூழ்கிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாய், தந்தை இருவரும் காவிரியில் குளித்துவிட்டு கரைக்கு வருவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த இரண்டு குழந்தைகள் பரிதவித்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனல் கக்கும் வெயில்..! பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப் போகிறதா.? பள்ளிக்கல்வித்துறை முடிவு என்ன.?
இருவரின் உடல்களை மீட்ட பூலாம்பட்டி காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து பூலாம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.