கும்பலாக குவிந்து வரும் குடிமகன்கள் கூட்டம்.. டாஸ்மாக்கில் ஒரே நாளில் களைகட்டிய விற்பனை..!

By Manikandan S R SFirst Published Oct 1, 2019, 9:36 PM IST
Highlights

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளதை தொடர்ந்து தற்போது குடிமகன்கள் கூட்டம் மதுபான கடைகளில் அலை மோதுகிறது.

தமிழகம் முழுவதும் 6500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பண்டிகை நாட்கள், வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். அதனால் மேற்கண்ட நாட்களில் விற்பனையும் களைகட்டும்.

திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், சுதந்திர நாள் போன்ற முக்கிய நாட்களில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் அக்டோபர் 2 , காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாநிலம் முழுவதும் இருக்கும் மதுபான கடைகள் அனைத்தும் நாளை  அடைக்கப்பட உத்தரவிட பட்டிருக்கிறது. இதன்காரணமாக டாஸ்மாக் கடைகளில் தற்போது கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் இன்று அதிகளவில் விற்பனை நடப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

நாளை விடுமுறை என்பதால் இன்றே குடிமகன்கள் தங்களுக்கு தேவையான சரக்கை வாங்கி வைக்கின்றனர். அதில் சிலர் மொத்தமாக சரக்குகளை வாங்கி பதுக்கி அதை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதனால் காவல்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டிருக்கிறது. அதிக அளவில் மதுபானங்களை வாங்கி செல்பவர்களை காவலர்கள் கண்காணித்து கைது செய்து வருகின்றனர்.

மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், படிப்படியாக கடைகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!